Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக குழுவினர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மோதர நிபுனின் சகோதரர் மோதர சத்துர மற்றும் புளூமெண்டல் சங்க எனப்படும் நபர் ஆகிய இருவரும் நேற்று (13) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் தங்கியிருந்த இருவரையும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர். குறித்த...

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருகுவட்டவ பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், தான் நடத்தி வரும் வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வதற்காக வந்த சிறுமியை உள்ளே அழைத்துச்...

சட்டவிரோதமாக 26,600  சிகரெட்டுக்களை கடத்திய நபர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வரி விலக்கு வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவான சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற 40 வயது நபர் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து 133 அட்டைப்...

கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்பாணம், பருத்தித்துறை, புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12) இரவு குறித்த பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். தேடுதல் நடவடிக்கையின் போது, சிறுவனின் வீட்டுக்கு அருகில் அமைந்திருந்த கிணறு ஒன்றுக்குள் சிறுவனின் சடலம்...

சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா குழு இலங்கையில் ஆய்வு!

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளை தடுப்பதற்கான உபகுழு (SPT) 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் 15 முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஆய்வு நடத்தவுள்ளது. இலங்கையில் தடுத்து வைக்கப்படும் நபர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும் என ஐ.நாவின் இலங்கை அலுவலகம்...

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று வழங்கப்படும் என கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற Trial-at-Bar அறிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், கடமையை அலட்சிய...

போதைப்பொருள் பரிசோதனை – பேருந்து சாரதிகள் கைது

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் சேவையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை நேற்று (11) ஹொரணை பிரதான பேருந்து நிலையத்தில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டது. ஹொரணை, இங்கிரிய, மொறக்கஹேன மற்றும் அக்குரணை பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன அதிகாரிகளுடன்...

இலங்கையின் முதலாவது படகு இறக்கும் தளம் திறப்பு

இலங்கையின் முதலாவது பிரத்தியேக படகு இறங்குத்துறை நேற்று (Boat Launching Ramp) களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நாட்டின் படகு ஏற்றுமதித்துறையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய படியாகும். தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சினால் 76 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தளம், இலங்கையின் எதிர்கால பொருளாதார...

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் (CCIB) பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு, குற்றக் கும்பல்களிடம் ஆயுதங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால், அவர்கள்...

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் அடங்குவர் என ஊடகங்களை சந்தித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U வூட்லர் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டில் இவ்வாறான 595...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...