Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில்  இரண்டு ஊதியங்களை பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு செடவத்தை பகுதியில் உள்ள களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (17) காலை கிராண்ட்பாஸ் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்த நபருக்கு 35 முதல் 40 வரை என நம்பப்படுகிறது. உயிரிழந்தவர் சுமார் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும்...

பாடசாலைகளில் அங்கீகாரமற்ற நிறுவனங்களின் திட்டங்களை  அனுமதிக்க முடியாது – பிரதமர் 

அரச அங்கீகாரமற்ற நிறுவனங்கள் மற்றும் குழுக்களால் முன்மொழியப்படும் எந்தவொரு திட்டமும் எந்த சூழ்நிலையிலும் பாடசாலைகளுக்குள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கலந்துரையாடல் அனுராதபுரத்தில் உள்ள மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றது. இதன்...

யோசித ராஜபக்ஷ கைது: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விளக்கம்

முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி யோசித கனிஷ்க ராஜபக்ஷவின் கைது தொடர்பான காரணங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விளக்கியுள்ளது. இன்று (17) வெளியிடப்பட்ட ஊடக  அறிக்கையில் ஆணைக்குழு  அவற்றை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில்,கடற்படை கேடட்டாக இருந்த ராஜபக்ஷ, 2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிர்வாக பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட...

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய  உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்துக்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதி, ஊவா மாகாண சபை தேர்தலின் போது 12,000 டி-சர்ட் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக அவர் மீது  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனூடாக அரசுக்கு நிதி இழப்பு...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆடம்பர ஹோட்டலில் அதிரடி சோதனை 

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஆடம்பர ஹோட்டலில் பாணந்துறை வளான  ஊழல் தடுப்பு அதிரடி படையினர் சோதனை நடத்தி உள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஹோட்டலில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடிப்படையாக கொண்டு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல்ல, மற்றும் பிரதம பொலிஸ் பரிசோதகர்...

 வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு  பெற்றுத் தருவதாக கூறி  4,990,000 ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவில் பிறந்த இலங்கை குடியுரிமை பெற்ற 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பிரிவு நேற்று நண்பகல் 12 மணியளவில் குறித்த நபரை கைது செய்ததாக கூறப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய, கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரிடம், வேலை...

யோசித ராஜபக்ஷ விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார். குறித்த ஆணைக்குழு முன், நேற்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்று காரணமாக இன்று ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை...

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை பொலிஸ் பிரிவின் தென்னமரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் 20 மில்லியன் ரூபாவிற்கு குறித்த புராதன பொருளை விற்க முயற்சித்த போது கைது செய்யப்பட்டனர் எனத்...

காலி தேசிய வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீ விபத்து

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில்  பொருத்தப்பட்டிருந்த மின்மாற்றியில் ( transformer) இன்று நண்பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வைத்தியசாலை அதிகாரிகள் உடனடியாக குறித்த பிரிவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளனர். வைத்தியசாலை ஊழியர்கள் காலி மாநகர சபையின் நகர தீயணைப்பு பிரிவினருடன்...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...