Wednesday, November 25, 2026
No menu items!

புதிய செய்திகள்

இணையம் மூலம் சிறுவர்களை இலக்கு வைக்கும் குற்றவாளிகள்

இணையம் மூலம் சிறுவர்கள், குற்றவாளிகளுக்கு இரையாகும் நிலை காணப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார். தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய தற்போதைய சமூகத்தில் பாடசாலை மாணவர்கள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தினாலும், சில சந்தர்ப்பங்களில் அவற்றில் உள்ள அபாயங்கள் குறித்த போதிய...

ஐ.எம்.எப் உடனான அடுத்த கட்ட நகர்வுகள் யாவை; ஜனாதிபதி விளக்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய ஏற்பாடு முடிவடைந்த பின்னர் மற்றொரு திட்டத்தில் இணைவதை இலங்கை நிராகரிக்கவில்லை, எனினும் அரசாங்கம் அது தொடர்பில் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது பேசிய ஜனாதிபதி, தற்போதுள்ள  ஐ.எம்.எப் திட்டத்தின் கீழ் அடையப்பட்ட பொருளாதார...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) காலை மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறிது நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பாக வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த வைத்திய பரிசோதனை முடிவுகள்...

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு முன் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன் எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை (13) இரவு 4:00 மணி வரை 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எச்சரிக்கை...

சிராந்தி ராஜபக்ஷ இருதய சிகிச்சை பிரிவில் அனுமதி

வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சிராந்தி ராஜபக்ச இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சேனக பல்லேதென்ன தெரிவித்தார். இதேவேளை கடந்த 7ஆம் திகதி அவர்...

முன்னாள் எம்.பி சந்திம வீரக்கொடி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இலஞ்ச ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார். தற்போது இடம்பெற்று  வரும் விசாரணை தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்காக அவர் இலஞ்ச ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் திருத்தப்படும்; ஜனாதிபதி

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் முன்னர் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்காலத்தில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (11) பிற்பகல் இப்பாகமுவ பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்களால் தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட...

நாவலப்பிட்டி மேயரின் மகன்,மருமகன் கைது

நாவலப்பிட்டி நகரபிதாவின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நபர் ஒருவரை தாக்கியதாகக் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன விபத்தைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்ட பின்னர் குறித்த தாக்குதல் நடந்துள்ளது, பின்னர் அது உடல் ரீதியான மோதலாக மாறியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேயரின் மகன் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு...

 சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவோருக்கு 20 மில்லியன் வரை அபராதம்: பிரதமர்

அபாயகரமான கழிவுகளால் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு 20 மில்லியன் ரூபாய் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்க சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களை அழிப்பவர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜாதிக நாமல் உயனவின் 36வது ஆண்டு...

நேபாள வெள்ளம்; இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்கு உட்பட்ட கோர்கா மாவட்டத்தில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில், காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வருவதாக தெரிவித்துள்ளதாக...
- Advertisement -

Latest News

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கும் வாய்ப்பு...