Sunday, May 10, 2026
No menu items!

காவல்துறையினர்

வனப்பகுதியில் மர்மமான முறையில் காணப்பட்ட சடலங்கள்..!

பன்னல - கங்கானியம்முல்ல வனப்பகுதியில் இன்று (1/19/2025) காலை இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களுக்கு அருகில், அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் உந்துருளி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பன்னல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய ஆண் ஒருவரும், 32 வயதுடைய பெண் ஒருவரினுடைய சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் இருவரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என அப்பிரதேச மக்கள்...

ஹொரேவெல பகுதியில் பெண் ஒருவர் கொலை!

வலஸ்முல்ல - ஹொரேவெல பகுதியில் நேற்று (16) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வலஸ்முல்ல - ஹொரேவெல, கொஸ்ருப்ப தோட்டத்தில் வசித்து வந்த 61 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஆவார். குறித்த வீட்டில் அவர் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த ஒருவர், இவ்வாறு தாக்குதல்...

கைப்பற்றப்படும் சட்டவிரோத வாகனங்கள் – முக்கிய உறுப்பினர்கள் மீது சந்தேகம்..!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் ரக வாகனமொன்று பிங்வத்தை – பாடசாலை மாவத்தை பகுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. அதேநேரம் இரத்மலானை தொடருந்து நிலையத்துக்கு அருகிலிருந்து இரண்டு லேண்ட் ரோவர் ரக வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன. வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதி...

யாழை அச்சுறுத்தும் திருட்டுக் கும்பல் – மக்களின் உதவியை கோரும் காவல்துறை..!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, சுன்னாகம் ஆகிய பகுதிகளை அண்டிய பல்பொருள் அங்காடிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் காவல்துறையினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். சுன்னாகம் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சூட்சுமமான முறையில் பொருள்களைத் திருடும் சம்பவங்கள் அங்குள்ள பாதுகாப்பு...

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான முறைப்பாடு இன்று நீதிமன்றில் ..!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் இன்றையதினம் (11.12.2024) நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம்...

கம்பஹாவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கம்பஹா கவுடன்கஹ பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் கம்பஹா - மாகோவிட்ட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உந்துருளியில் பிரவேசித்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   <!-- -->

கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் – மூவர் கைது..!

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை - கொட்டாவ (174) வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால்...

மெக்சிகோவில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 சடலங்கள் மீட்பு!

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 குழந்தைகளின் உடல்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். <!-- -->

மட்டக்களப்பில் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!

மட்டக்களப்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் பகுதியில் நேற்றிரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி முரளிதரனின் தேசிய ஜனநாயக முன்னணியின் கட்சியின் வேட்பாளர் காரியாலயத்தின் முன்பாக நின்றிருந்த...

பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்து!

அலவ்வ - பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (24.10) இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளி அலவ்வயிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் பொல்கஹவெல...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img