Thursday, July 16, 2026
No menu items!

சீனா

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதன் ஒரு பகுதி முற்றாக எரியுண்டுள்ளது. நேற்றிரவு 7.45 அளவில் குறித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த தீப்பரவலை கொழும்பு துறைமுக தீயணைப்புத்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலே தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனாத் தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை; சி.ஐ.ஏ அறிக்கை!

கொரோனாத் தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை. அது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியதாக  அமெரிக்க உளவுத்துறையான  சி.ஐ.ஏ. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  ஆனால் குறைந்த அளவிலான ஆதாரங்கள் மற்றும் அதிலுள்ள சில முரண்கள் காரணமாக உறுதியாக கூற முடியவில்லை என்றும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால்  இதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

3.7 பில்லியன் டொலர் பெறுமதியில் சினோபெக் சுத்திகரிப்பு நிலையம்..!

அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள சீனாவின் முன்னணி உலகளாவிய பெட்ரோலிய நிறுவனமான சினோபெக்கினால் 3.7 பில்லியன் டொலர் பெறுமதியான சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேலதிகமாக 200 ஏக்கர் நிலம் கோரப்படுவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கேடிஎம்யு ஹேமபாலவின் கூற்றுப்படி, சினோபெக் மற்றும் சீன அரசாங்கத்திடம் இருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன, இதில்...

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிறுவ திட்டம்!

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான சீனாவின் சினோபெக்குடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் இதேபோன்ற வசதியை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமீபத்தில் சீனாவிற்கு விஜயம் செய்தபோது, உலகின் முன்னணி பெட்ரோலிய மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக்குடன்...

கோழி இறைச்சியின் பாகங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி..!

கோழி இறைச்சியின் பாகங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கோழி இறைச்சியிலிருந்து அகற்றப்படும் கோழித் தலை மற்றும் கால்களே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22/1/2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து...

விண்ணில் ஏவப்பட்ட பாகிஸ்தானின் செயற்கைக்கோள்!

பாகிஸ்தான் நாட்டில் தயாரான பாகிஸ்தானுக்கு சொந்தமான எலக்ட்ரோ-ஆப்டிகல் (EO-1) என்ற செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. PRSC-EO-1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவும் மையத்தில் இருந்து செலுத்தப்பட்டு, விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இயற்கை வளங்கள் இந்த செயற்கைக்கோள் பாகிஸ்தானின் இயற்கை வளங்களை கண்காணித்து நிர்வகிக்கும் திறனை அதிகரிக்கவும், பேரிடர்கள்...

நவீனமயமான மாநாட்டு மையத்தை நிர்மாணிக்கவுள்ள சீனா; ஜனாதிபதி!

சர்வதேச வர்த்தக உச்சி மாநாடுகள் மற்றும் பாரிய அளவிலான நிகழ்வுகளை நடத்தும் இலங்கையின் திறனை மேம்படுத்தும் நோக்கில், கொழும்பு துறைமுக நகரத்தில் அதிநவீன கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை சீனா நிர்மாணிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார அறிவித்துள்ளார். முழுக்க முழுக்க சீனாவால் நிதியளிக்கப்பட்ட இந்த புதிய வசதி, அளவு மற்றும் செயல்பாட்டில் பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மாநாட்டு...

சீனாவின் உதவிகள் கடன்பொறியா? -அனுரகுமார திசநாயக்க மறுப்பு..!

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை  கருத்துக்களை நிராகரித்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க. உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்துள்ளார். சீனாவின் சின்ஹ_வாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும்...

சீன முதலீட்டை முதலில் கொண்டுவர முயற்சித்தவர்கள் முன்னால் ஜனாதிபதி மஹிந்த-நாமல் தான்

சீனாவிடமிருந்து அன்னிய நேரடி முதலீடாக பெறப்பட்ட ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முதலீடு தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்திலும் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்திலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் இதே முதலீடு...

சீனாவின் மக்கள்தொகை தொடர்ச்சியாக சரிவு..!

சீனாவின் மக்கள்தொகை தொடார்ந்து மூன்றாவது ஆண்டாக கடந்த 2024ஆம் ஆண்டிலும் சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முந்தைய 2023-ஆம் ஆண்டைவிட கடந்த 2024-ஆம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகையில் 13.9 இலட்சம் குறைந்து 140.8 கோடியாகப் பதிவாகியுள்ளது. அந்த வகையில், தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டின்...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img