Tuesday, April 28, 2026
No menu items!

ஜீவன் தொண்டமான்

பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்திய ஜீவன்..!

நுவரெலியா மாவட்டத்தில், யானை சின்னத்தின் கீழ் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். கொத்மலை - வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கான தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு செலுத்தினார்.

ஜனாதிபதி மீது குற்றம் சுமத்திய ஜீவன்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டியுள்ளார். டயகம பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே பேசாமல், ஏனையோருக்குச்...

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு!

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25வது சிரார்த்த தினமான இன்று (30) கொழும்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தேசிய அமைப்பாளர் சக்திவேல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை...

பெருந்தோட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை ஜனாதிபதி; ஜீவன்!

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிடும் தற்போதைய ஜனாதிபதி, பெருந்தோட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நோர்வூட் - நியூவெலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் மீனவர்களுக்குச் சலுகைகளை வழங்கினார். விவசாயிகளுக்குச் சலுகைகளை...

வேட்பு மனு தாக்கல் செய்த இ.தொ.கா…

நடைபெறவுள்ள பாராளுமன்ற  தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி இராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய...

ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளியாக இ.தொ.காவும் கம்பீரமாக நிற்கும்: ஜீவன் அதிரடி கருத்து..!

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சிம்மாசனம் ஏறும்போது அந்த வெற்றியின் பங்காளியாக இ.தொ.காவும் கம்பீரமாக நிற்கும். அதுமட்டுமல்ல மலையக மறுமலர்ச்சி திட்டத்தை அவரின் ஆட்சியின்கீழ் வெற்றிகரமாக நிறைவு செய்வோம் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்,...

இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு தொடர்ந்து வளரும்; ஜீவன் தொண்டமான்..!

இலங்கை மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு தொடர்ந்து செழித்து வளரும் என்பது எனது இடைவிடா நம்பிக்கை என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் சார்பில் மலேசியாவின் 67வது தேசிய தின நிகழ்வு  கொழும்பு ஒன் கோல்பேஸ் விருந்தகத்தில் நடைபெற்றது. இந்த...

இலங்கை நாட்டின் தலையெழுத்து எப்படி அமையப்போகின்றது; வவுனியாவில் ஜீவன் தொண்டமான்…!

வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இயலும் ஸ்ரீலங்கா தேர்தல் பிரசாரத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இங்கு அனைவரும் திரண்டுள்ளீர்கள் அதற்கு காரணம் ஜனாதிபதி தேர்தல். நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் விடயத்தை பற்றி கலந்துரையாடியிருந்தேன். நுவரெலியா மற்றும் மலையகம்...

ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரச்சாரம்…!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரச்சாரம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கு ஆதரவு வழங்க கடந்த18ஆம் திகதி இ.தொ.காவின் தேசிய...

கைது செய்யப்படும் ஜீவன் தொண்டமான்…!

களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img