Sunday, May 17, 2026
No menu items!

புதிய செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தைக்காகவே ஈரான் பிரதிநிதிகள் உயிருடன் இருக்கிறார்கள்; ட்ரம்ப்

சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை சிறிது காலம் மிரட்டலாம் என்பதை தவிர்த்து ஈரானியர்களிடம் வேறு எதுவுமே இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஆரம்பித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு...

அமைதி பேச்சுவார்த்தையில் முழு நம்பிக்கை இல்லை;பாகிஸ்தான் விரைந்த ஈரான் பிரதிநிதி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல் ஆறு வாரங்களாக தொடர்ந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி தற்காலிகமாக யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கான மத்தியஸ்தம் செய்வதற்கு பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஈரான்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் சி.ஐ.டியில் முறைப்பாடு

இலங்கைக்கு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறையில் (CID) இன்று (ஏப்ரல் 11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் சமர்ப்பித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தணிக்கை அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளின்...

எரிபொருள் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது கியூ.ஆர் முறைமை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே ராஜகருணா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் வாகன இலக்க தகட்டின் ஒற்றை...

ஊழல்வாதிகளுடனான கொடுக்கல் வாங்கல் நிறுத்தப்பட்டுள்ளதால் குற்றம் சாட்டப்படுகிறது; வலுசக்தி அமைச்சர்

ராஜபக்சக்களுடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10) அவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தின் போது உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில், நிலக்கரி விநியோகஸ்தர்களுடன் நான் நேரடியாக தொடர்பு...

பொருட்களின் விலை அதிகரிப்பால் மாணவர்களுக்கான உணவு திட்டத்தில் நெருக்கடி

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சுமார் 7000 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.6 மில்லியன் மாணவர்களை...

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராஸி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அவர் நேற்றைய தினம் (09) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 81 வயதான கமல் கராசி வெளியுறவு அமைச்சின் சர்வதேச உறவுகளுக்கான மூலோபாய குழுவின் தலைவராக பணியாற்றி...

இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் அமெரிக்க பிரதி ஜனாதிபதி கருத்து

லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மீதான குண்டு வீச்சு தாக்குதலில் சுமார் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 1150 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தரப்பு மற்றும் ஈரான் ஆகிய நாடுகள்...

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும் ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு ஊடாக நாட்டுக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் தொடர்பில் விசேட பரிசோதனை!

பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதேச மற்றும் நகர சபை மட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சுமார் 2000 பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். உணவு தயாரிக்கும் நிறுவனங்களை சோதனை செய்தல்,...
- Advertisement -

Latest News

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் எனக் கருதப்பட்ட அபு-பிலால் அல்-மினூகியை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அந்நாட்டு அரசு...